உலகை அச்சுறுத்தும் அணு ஆயுத விவகாரம்! டிரம்ப்-கிம் மீண்டும் சந்திப்பு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அணு ஆயுத விவகாரம் குறித்து அமெரிக்கா மற்றும் வடகொரிய ஜனாதிபதிகள் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனை நடத்தியதன் காரணமாக வடகொரியாவின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா இதனை செய்து வந்ததால் சர்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இருவரும் கடந்த ஆண்டு இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் இரு நாடுகளுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகிறது.

இதனால் இரு நாட்டு தலைவர்களும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியம் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வடகொரியா நியமித்துள்ள சிறப்பு அதிகாரியான கிம் யோங்-சோல், அணு ஆயுத குறைப்பு தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், டிரம்ப்-கிம் இருவரும் அடுத்த மாத இறுதியில் மீண்டும் சந்தித்து பேச உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த சந்திப்பை தங்கள் நாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவதாக வியட்நாம் நாட்டின் பிரதமர் Nguyen Xuan Phuc தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Reuters

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...