வெளிநாட்டில் காதலியை கொலை செய்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரில் காதலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் பகுதியில் பெண் ஒருவர் கூச்சலிடும் சத்தம் கேட்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், சத்தம் வந்த வீட்டின் உள்ளே நுழைந்த போது, அங்கு ஒரு பெண் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்தியாவை பூர்விகமாக கொண்ட கிருஷ்ணா (34) என்ற இளைஞரும் மல்லிகா பேகம் ரஹம்சனா அப்துல் ரஹ்மான் (40) என்கிற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாகவே சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 3 நாட்களுக்கு முன்பிலிருந்து தினமும் இரவு நேரத்தில் சத்தமாக சண்டையிட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று கூட, இறுதியாக கிருஷ்ணன் தான், அந்த பெண்ணின் வீட்டிற்குள் இருந்து வெளிவந்துள்ளார்.

அதன்பேரில் கிருஷ்ணனை கைது செய்து பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, 25ம் தேதி வரை குற்றவாளியை நீதிமன்ற சிறைக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers