அரைநிர்வாணமாக கிடந்த சிறுமியின் சடலம்... தூக்கில் தொங்கிய மர்ம நபர்! பெரும் குழப்பத்தில் பொலிஸார்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

அர்ஜென்டினாவில் காரில் ஏறி சென்ற இளம்பெண் அரைநிர்வாணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜென்டினாவை சேர்ந்த 17 வயதான Agustina Imvinkelried என்கிற இளம்பெண், அரைநிர்வாணமாக சாண்டா ஃபே பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படவில்லை எனவும், உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் அவருடைய முகத்தில் மோசமான காயங்கள் இருந்ததால், பலாத்காரம் செய்ய முயற்சிக்கும்போது தடுக்க நினைத்திருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்ற Agustina, அங்கிருந்து ஒரு காரில் ஏறி புறப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.

அதன்பேரில் காரை ஒட்டிய 39 வயதான பப்லோ ட்ரியோன்ஃபினி என்பவரின் வீட்டிற்கு பொலிஸார் சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனால் பொலிஸார் பெரிதும் குழப்பத்துடன் விசாரணையை துவக்கியுள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers