சட்டவிரோதமாக ஆதிவாசிகளை சந்தித்த நபர்: கடுமையாக தண்டனை வழங்கும் அரசாங்கம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சட்டவிரோதமாக ஆதிவாசிகளை சந்தித்த ஒரு நபர் மீது இனப்படுகொலை குற்றம் சாட்டப்படலாம் என தெரியவந்துள்ளது.

ஆதிவாசிகளை சென்று சந்தித்ததன்மூலம், அவர்களுக்கு புதிய நோய்களை அறிமுகம் செய்யும் வாய்ப்பிருப்பதால், அந்த ஆதிவாசி இனமே நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகி அழியும் அபாயம் உள்ளது என்பதால், பிரேஸில் உள்துறை அமைச்சகம் இந்த அதிரடி நடவடிகையை எடுக்க உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் கேம்பல் ஒரு கிறிஸ்தவ மிஷனெரி. அவர் ஜமமேடி ஆதிவாசிகள் என்று அழைக்கப்படும் பிரேஸிலின் ஒரு ஆதிவாசி இனத்தவருடன் வசித்து வருகிறார்.

அவர்களுக்கு கடவுளைப்பற்றி கூறும் முயற்சியில் அவரும் அவரது மனைவியுமான ராபினும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜமமேடி ஆதிவாசிகளை சந்திப்பதற்கே அவர் அரசிடம் அனுமதி பெறாத நிலையில், அவர்களுக்கு அருகில் உள்ள இன்னொரு இடத்தில் வசிக்கும் ஹை மெரிமா ஆதிவாசிகள் என்னும் இனத்தவர்களையும் சந்தித்ததால் கேம்பல் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் அவர் ஜமமேடி ஆதிவாசிகளுக்கு GPS குறித்து கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக ஹை மெரிமா ஆதிவாசிகள் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

என்றாலும் அவர் சட்டவிரோதமாக ஆதிவாசிகளை சந்தித்ததால், அவர் மீது கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஆதிவாசிகள் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளாதவர்கள்.

அவர்களை வெளி உலகத்தில் உள்ளவர்கள் சந்திக்கும்போது, அவர்களிடமிருந்து ஆதிவாசிகளுக்கு கிருமிகள் பரவலாம்.

வெளி உலகத்தில் உள்ளவர்களைப்போல் அல்லாமல் ஆதிவாசிகளுக்கு அந்த கிருமிகள் புதியவை என்பதால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது.

அதனால் அந்த கிருமிகள் அந்த பகுதியில் வசிக்கும் அனைவரையுமே நோய்வாய்ப்படுத்திவிட முடியும்.

இதனால் ஒரு இனமே அழியும் அபாயம் உள்ளது. எனவேதான் பிரேஸில் உள்துறை அமைச்சகம் கேம்பல் மீது இனப்படுகொலை வழக்கு பதிய இருக்கிறது.

ஏற்கனவே ஜான் என்னும் அமெரிக்க மிஷனெரி அமேஸான் ஆதிவாசிகளை சந்திக்கச் சென்று உயிரிழந்த நிலையில், தொடர்ந்து அமெரிக்கர்கள் ஆதிவாசிகளை சந்திக்க முயற்சி செய்வதால் ஆதிவாசிகளை பாதுகாக்கும் நோக்கில் பிரேஸில் அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...