உடைந்த அணை... பெருக்கெடுத்தோடிய வெள்ளத்தில் சிக்கிய நபர்: நடுங்க வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் உடைந்த அணையில் இருந்து வெளியேறிய சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை மின்னலாக பறந்து வந்து மீட்பு குழு காப்பாற்றியுள்ளது.

பிரேசில் நாட்டில் புரு மாடின்கோ நகரத்தில் பயன்பாட்டில் இல்லாத அணை ஒன்று உடைந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் திடீரென்று அணை உடைந்து அப்பகுதி முழுவனும் வெள்ளக்காடாக மாறியது. இந்த விபத்தில் சிக்கி 200 பேர் மாயமானதாகவும் இதுவரை 7 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே வெள்ளம் மற்றும் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை மீட்புகுழுவினர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றும் காட்சிகள் சர்வதேச அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

விபத்து ஏற்பட்ட பிரதேசம் முழுமையும் சகதியால் மூழ்கியுள்ளதால் பலர் அதில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆயிரத்திலதிகமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உயிரிழப்பு பலமடங்கு அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers