மனைவியுடன் காதலன் நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன்: நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் மனைவியுடன் காதலன் நெருக்கமாக இருப்பதை பார்த்த கணவன் ஆத்திரத்தில் காதலரின் கால்களை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில் அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரும் ஓடிபோய் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள்.

தம்பதியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் நபர் ஒருவருடன் அப்பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கள்ளக்காதலனுடன் அப்பெண் தனிமையில் இருந்தார்.

அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த பெண்ணின் கணவர் அந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து ஆத்திரத்தில் அங்கிருந்த இரும்பு கம்பியால் கள்ளக்காதலன் கால்களை அடித்து உடைத்தார்.

வலியால் துடித்த அவரின் சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் அங்கு வந்து இரும்பு கம்பியுடன் இருந்த நபரை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers