மணமகள் போலவே உடையணிந்து மணமகன் அருகில் வந்த பெண் செய்த திடுக் செயல்.. 675,000 பேர் பார்த்த வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

திருமணம் நடக்கவிருந்த சமயத்தில் மணப்பெண் போலவே உடையணிந்து வந்த பெண்ணொருவர், மணமகனிடம் சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில், இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கு திருமணம் நடத்த எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்த சூழலில் அங்கு இருவரின் உறவினர்களும் கூடியிருந்தனர்.

அப்போது அங்கு மணப்பெண் போல வெள்ளை நிற புத்தாடை அணிந்து ஒரு பெண் வந்தார்.

வந்த பெண் நேராக மணமகன் அருகில் சென்று அவரிடம் வாக்குவாதம் செய்தார், அப்போது தான் அந்த பெண் மணமகனின் காதலி என்பதும், அவருக்கு பதிலாக மணமகன் வேறு பெண்ணை திருமணம் செய்யவிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தன்னை போலவே உடையணிந்து வருங்கால கணவரிடம் சண்டை போட்டு கொண்டிருந்த பெண்ணை பார்த்து மணமகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

ஆனால் அவர் அப்பெண்ணை தடுக்கவில்லை. இதன்பின்னர் அருகிலிருந்தவர்கள் அங்கு வந்த பெண்ணை அங்கிருந்து அழைத்து சென்றார்கள்.

இந்த வீடியோ 675,000-க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு வைரலாகியுள்ளது.

இந்நிலையில் ஒரு பெண்ணை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்வது தவறில்லையா என இணையவாசிகள் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers