51 பேர் உடல் கருகி பலியான விமான விபத்து: விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நேபாள தலைநகர் தாக்காவில் தரையிறங்கும்ப்போது விபத்துக்குள்ளான பங்களாதேஷ் விமானம் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.

வங்க தேச விமானத்தின் விமானி, சம்பவத்தின்போது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி விமானத்தை அவர் பாதுகாப்பாக தரையிறக்கலாம் என கருதி செயல்பட்டதாகவும், ஆனால் அவரால் முடியாமல் போனது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கட்டுப்பாட்டு அறையுடன் ஏற்பட்ட தவறாக கருத்துப்பரிமாற்றமே விமான விபத்திற்கு காரணம் என முதலில் கருதப்பட்டது.

ஆனால் விமானி குறித்த சம்பவத்திற்கு முன்னர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், விமானியின் அறையில் புகைபிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 71 பயணிகளுடன் தாக்காவில் இருந்து காட்மண்டு நோக்கி பயணமான வங்க தேச விமானமானது நேபாள தலைநகரில் விபத்துக்குள்ளானது.

இதில் இரு விமானிகள் உள்ளிட்ட 4 ஊழியர்களும் 47 பயணிகளும் உடல்கருகி பலியாகினர். நேபாள வரலாற்றில் சுமார் 26 ஆண்டுகளுக்கு பின்னர் இதுபோன்றதொரு பேரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விமானத்தை செலுத்திய 52 வயது விமானி வங்க தேச விமானப் படையில் பணியாற்றியவராவார். அதிக மன உளச்சல் காரணமாக 1993 ஆம் ஆண்டு விமானப்படையில் இருந்து இவர் வெறியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers