மரண விளிம்பிலிருந்து உயிர் தப்பிய இளம்பெண்ணுக்கு 11 வருடங்களுக்கு பின் காத்திருந்த ஆச்சர்யம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தைவானில் 11 வருடங்களுக்கு முன்பு இரத்தம் கொடுத்து உயிரை காப்பாற்றிய நபரை தேடிய போது, இளம்பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

தைவானை சேர்ந்த லின் ஜியாஃபென் என்கிற பெண் 11 வருடங்களுக்கு முன்பாக ஒரு பெரும் விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு அதிக ரத்தம் செலுத்தப்பட்ட பின்னரே உயிர் பிழைத்துள்ளார்.

இந்த நிலையில் லின் ஜியாஃபென், இரண்டு வருடதிற்கு முன்பு அறிமுகமான தன்னுடைய காதலன் லியான் ஜூசேனிடம், தனக்கு நேர்ந்த விபத்து குறித்து கூறிக்கொண்டிருந்துள்ளார்.

இதனை கேட்ட லியான் ஜூசேன், நான் ஒரு காலத்த்தில் இரத்த தானம் செய்துள்ளேன். ஒருவேளை என்னுடைய ரத்தம் தான் உனக்கு செலுத்தப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

உடனே இதனை தீவிரமாக எடுத்துக்கொண்ட லின், மருத்துவமனை சென்று விசாரிக்க ஆரம்பித்துள்ளார். அங்கு பழைய தரவுகளை ஆய்வு செய்த ஊழியர், உங்களுக்கு ரத்தம் கொடுத்தவர் பெயர் லியான் ஜூசேன் என தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு லின் பெரும் ஆச்சர்யமடைந்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் லியான் ஜூசேன், யாருக்காவது இரத்தம் தேவைப்பட்டால் கொடுங்கள். பின்னாளில் அவர்கள் உங்கள் மனைவியாக கூட இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers