பேஸ்புக்-ட்விட்டரில் இருந்து வெளியேற ராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என அந்நாட்டு ராணுவ தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து ரகசியங்கள், தகவல்கள் கசிவதை தடுக்க அந்நாட்டு தலைமை ராணுவ அலுவலகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் அனைவரும் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இயங்கும் ராணுவ தலைமை அலுவலகம் இதற்கான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. மேலும் இந்த உத்தரவு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers