வாயிலும் மூக்கிலும் இரத்தத்துடன் நடமாடும் பாங்காக் மக்கள் : அதிர்ச்சிக் காரணம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இருமும்போதும் தும்மும்போதும் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் கொட்டும் பரிதாப நிலைமைக்கு வந்து விட்டார்கள் பாங்காக் மக்கள்.

அதுமட்டுமின்றி செல்லப்பிராணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக விலங்குகள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

PM2.5 அளவுடைய அபாயகரமான துகள்கள் நிறைந்த smog எனப்படும் புகையும் பனியும் சேர்ந்ததால் ஏற்பட்டுள்ள காற்று மாசின் தாக்கத்தால் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் தாய்லாந்தின் தலைநகரான பாங்காகில் உள்ள மக்கள்.

வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, கட்டுமானப்பணியால் உருவாகும் தூசு, வைக்கோலை எரித்தல், மற்றும் சாலையோர பார்பிக்யூ அடுப்புகளிலிருந்து வரும் புகை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்காக பல மில்லியன் டொலர்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் சமூக ஊடகங்களில் மக்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போது மனிதர்கள் மட்டுமல்ல செல்லப்பிராணிகளும் ஏற்கனவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது நன்றாக தெரிகிறது.

மாஸ்க் அணிந்தபின்னரும் தும்மும்போதும், இருமும்போதும் இரத்தம் வடியும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

தாய்லாந்து அரசு 439 பள்ளிகளை மூடியுள்ளதோடு, எதையாவது செய்து இந்த புகைமூட்டத்தை அகற்றினால் போதும் என்ற எண்ணத்தில் ஏடாகூடமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

உதாரணமாக நேற்று ட்ரோன்கள் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் முயற்சியைக் கூறலாம், என்றாலும் பனிமூட்டம் குறைந்தபாடில்லை.

நேற்று ஆஸ்துமா நோயாளி ஒருவர் காற்று மாசால் நுரையீரல் பாதிக்கப்பட்டு கண்கள் இரத்தமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

செத்துப் போய் விடுவேன் என்று நினைத்தேன், எல்லாவற்றிற்கும் இந்த காற்று மாசுதான் காரணம் என்று கூறும் Khun Songsamut, இதை சரி செய்ய ஏதாவது செய்யப்பட வேண்டும் என்கிறார்.

பாங்காகில் மனிதர்கள் மட்டுமின்றி ஏராளமான விலங்குகளும் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளன.

பிழைப்புக்காக வெளியே சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலையில், மக்கள் காற்று மாசு, புகையிலிருந்து தப்ப முகத்தில் மாஸ்க் அணிந்து நடமாடத் தொடங்கிவிட்டனர்.

இதற்கிடையில், சுற்றுலாவை நம்பி வாழும் தாய்லாந்துக்கு இந்த காற்று மாசு குறித்து வெளியாகியுள்ள செய்திகளால், பொருளாதார இழப்பும் ஏற்படும் என்கிறார் பொலிஸ் செய்தி தொடர்பாளரான கர்னல் Siriwat Deephor.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers