முறைதவறி பிறந்த குழந்தை... டி.என்.ஏ சோதனைக்கு மறுப்பு தெரிவித்த அரச குடும்பம்: வலுக்கும் எதிர்ப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பெல்ஜியம் நாட்டின் முன்னள் அரசருக்கு டி.என்.ஏ சோதனை நடந்த வேண்டும் என்ற நீதிமன்ற கோரிக்கையை அரச குடும்பம் மறுத்துள்ளதால் எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது.

பிரஸ்ஸல்ஸ் நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பில் வெளியிட்ட தீர்ப்புகளுக்கு அரச குடும்பம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பெல்ஜியத்தின் பிரபல கலைஞரான Delphine Boël என்பவர் அரசருக்கு முறைதவறி பிறந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே நீதிமன்றம் டிஎன்.ஏ சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக தாம் அரசரின் மகள் என்பதை நிரூபிப்பதற்காக நீதிமன்றத்தை நாடி வந்துள்ளார்.

இதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக பெல்ஜியம் அரசர் ஆல்பர்ட் முடி துறந்து தமது மகனான பிலிப்பிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

அதன் பின்னரே இந்த விவகாரம் பெல்ஜியத்தில் சூட்டைக் கிளப்பியது. பல ஆண்டு விசாரணைக்கு பின்னர் கடந்த அக்டோபர் மாதம் முதன் முறையாக டி.என்.ஏ சோதனைக்கு அரசரை உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

3 மாதத்திற்கும் ஆவணங்களை சமர்ப்பிக்கவும் கோரியது. ஆனால் அரசர் இரண்டாம் ஆல்பர்ட்டின் வழக்கறிஞர்கள் நீதிமன்ற கோரிக்கையை மறுத்துள்ளதுடன், அந்த தீர்ப்பை ரத்து செய்யவும் கோரியுள்ளனர்.

டி.என்.ஏ சோதனைக்கு அரசர் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், கலைஞர் Boël கூறுவது உண்மை தான் என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.

உத்தியோகபூர்வமாக கலைஞர் Boël-ஐ தமது மகள் என அரசர் இரண்டாம் ஆல்பர்ட் பிரகடனப்படுத்தவில்லை என்றாலும்,

1999 ஆம் ஆண்டு நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் இந்த விவகாரம் தொடர்பில் அவர் குறிப்பிட்டு பேசியதாகவும் பெல்ஜியம் மக்கள் நினைவு கூறுகின்றனர்.

அதில், 1960 முதல் 1970 வரையான காலகட்டத்தில் தமது திருமண வாழ்க்கை ஆட்டம் கண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Delphine Boël பெல்ஜியத்தின் உயர்குடி ஒன்றில் 1968 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். மேலும் தமது திறமையால் தற்போது பெல்ஜியத்தின் புகழ்பெற்ற கலைஞராக பெயரெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்