மனைவிக்காக ஒவ்வொரு நாளும் ஏங்கும் கணவன்! என்னிடமிருந்து அது பிரித்து வைத்திருக்கிறதே என கண்ணீர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
183Shares

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கணவர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு யாருடனும் பேசமால் இருக்கும் மனைவிக்காக ஒவ்வொரு நாள் மதியமும், தன் கிட்டாரை எடுத்து வாசிக்கும் சம்பவம் அவரது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் லுசியோ. இவர் சுவேலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி இப்போது பிரேசிலில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுவேலிக்கு 52 வயது இருக்கும் போது(2008-ஆம் ஆண்டு) அல்சைமர் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அவர் அனைவரின் பெயர்களையும் மறந்தது மட்டுமின்றி, எப்படி குளிப்பது, எப்படி கழிவறைக்கு செல்வது என்பதையும் மறந்துவிட்டார்.

அதன் பின் 2015-ஆம் ஆண்டு சுவேலி யாருடனும் பேசுவதில்லை, இதனால் மிகுந்த வேதனையில் இருந்த லுசியோ மனைவியிடம் இப்போது இசை மூலம் மட்டுமே பேசி வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், தன் மனைவியின் நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாக பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தேன்.

சாதரணமாகவே பதிவேற்றம் செய்தேன்( 54,000 ரியாக்ஷன்ஸ் மற்றும் 63,000 ஷேர்கள்), ஆனால் அது இந்தளவிற்கு ரீச் ஆகும் என்று தெரியவில்லை. இந்த அல்சைமர் நோய் கடந்த சில ஆண்டுகளாகவே என்னிடமிருந்து என் மனைவியை பிரித்து வைத்திருக்கிறது.

நான் அமெரிக்காவில் சில புகழ்பெற்ற கலைஞர்களோடு கிட்டார் வாசித்திருப்பதால், அந்த இசை மூலம் நான் என் மனைவியிடம் பேசுகிறேன். அந்த இசை நான் உன்னோடு இருக்கிறேன், உன் அருகில் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே இப்படி செய்கிறேன் என்று மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இதுக் குறித்து சுல்வேவின் மகன் பெட்ரோ, முன்பை விட இப்போது என் அம்மாவின் நிலை மிகவும் மோசமாகிவிட்டதாகவும், அவரால் என்னையும் என் தந்தையும் கூட இப்போதால் அடையாளம் காண முடியவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் லுசியோ அவளுக்கு சில சமயங்களில் அடையாளர் தெரிகிறது. கண்ணீர் விடுகிறாள். என்னுடைய இசையை கேட்கும் போது அமைதியாக இருக்கிறாள், நான் முத்தம் கேட்கும் போது, அவர் கொடுப்பார். எங்கள் மகனின் கண்ணத்திலும் அவர் முத்தம் அளிப்பார், இதனால் குணமடைய வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையில் உள்ளார்.

மனநல மருத்துவர்கள் சுவேலியின் இசை அவருக்கு மிகுவும் முக்கியம் என்று கூறியுள்ளனர். மனச்சோர்வினால் ஏற்படும் டிமென்ஷியாவின் ஒரு வகையே அல்சைமர் நோய்.

உலகின் டிமென்ஷியா பாதிக்கப்படும் நபர்களில் 60 சதவீதம் பேர் அல்சைமரால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அறிக்கை தெரிவித்துள்ளது.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்