ஒருகாலத்தில் மில்லியன் கணக்கில் சம்பாதித்த மொடல் அழகி: தற்போது தெருவில் கிடக்கும் அவலம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஒரு காலத்தில் வருடத்திற்கு 1 மில்லியன் பவுண்ட் வரை சம்பாதித்த மொடல் அழகி தற்போது தங்குவதற்கு ஒரு வீடு இல்லாமல் பார்சிலோனா தெருவோரத்தில் வசித்து வருகிறார்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நஸ்டாசியா அர்பானோ (57) என்பவர் 1980களில் பிரபலமான மொடல் அழகிகளில் ஒருவராக வலம்வந்தார்.

1981-ம் ஆண்டு, பிரபல பத்திரிக்கையான வோக் பத்த்ரிக்கையின் அட்டைப்பக்கத்தின் இடம்பிடித்து அனைவரின் கவனத்தை பெற்றார்.

அதன்பிறகு ரெவ்லோன் மற்றும் யுவஸ் செயிண்ட் லாரெண்ட் போன்ற பல முன்னணி பத்திரிக்கைகளின் அட்டைப்படத்தில் இடம்பிடிக்க ஆரம்பித்தார்.

அடுத்தடுத்து கிடைத்த அதிர்ஷ்டத்தால் நியூயார்க் நகரத்திற்கு பறந்து, அங்கு உள்ள பிரபலமான மொடல் ஏஜென்சியில் சேர்ந்தார்.

இப்படி புகழின் உச்சியில் இருந்த நஸ்டாசியா, தற்போது பார்சிலோனா தெருக்களில் உள்ள கடைகளின் வரவேற்பறையில் படுத்துறங்கி தன்னுடைய வாழ்க்கையை கழித்து வருகிறார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், நான் ஒரு காலத்தில் அனைத்து பத்திரிக்கைகளின் அட்டைப்படங்களிலும் இடம்பிடித்தேன். அப்போது வருடத்திற்கு 20 நாட்கள் மட்டுமே வேலை செய்து 1 மில்லியன் பவுண்ட் வரை சம்பாதித்தேன். அப்போது அனைவராலும் நான் விரும்பப்பட்டேன்.

அப்போது தான் என்னுடைய கணவரை சந்தித்தேன். பி.எம்.டபிள்யு கார் வாங்க வேண்டும் என கையெழுத்து கேட்டார். நானும் அவர் மீது இருந்த அளவுகடந்த காதலால் கையெழுத்து போட்டேன். அப்படியே என்னை ஏமாற்றிவிட்டு அனைத்தையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

தற்போது என்னுடைய உடமைகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு சுற்றித்திரிகிறேன் என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பேசுகையில், நான் வாழவிரும்புகிறேனே தவிர பிழைக்க விரும்பவில்லை. என்னை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் தற்போது போய் விட்டார்கள். ஆனால் எனக்கு அது ஆச்சர்யமாக இல்லை. என்னுடைய குழந்தைகளுக்கு முன்பு நான் மீண்டும் நல்ல முறையில் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவர்கள் என்னை நினைத்து பெருமைப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த செய்தியை கேள்விப்பட்டு அவருடைய கடந்த கால தோழிகள் அனைவரும் தற்போது உதவ முன்வந்துள்ளார்களாம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்