பெண்ணை தின்று தீர்த்த பன்றிகள் –ரஷ்யாவில் நிகழ்ந்த பரிதாபம்

Report Print Abisha in ஏனைய நாடுகள்

பன்றிகள் இருப்பிடத்தில் தவறுதலாக விழுந்துவிட்ட 56 வயதான பெண்ணை அவைகள் சாப்பிட்டு விட்டதாக ரஷ்ய ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

உட்மர்ட்டியாஎன்ற மத்திய ரஷ்யப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் விலங்குகளுக்கு உணவளிக்க தனதுவீட்டை விட்டு வெளியே வந்த விவசாயியான பெண்ணுக்கு, மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம்எனக் கூறப்படுகிறது.

இப்பெண்ணின்கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் இரவு வெகு முன்னதாகவே உறங்கியுள்ளார். காலையில் கண்விழித்த அவர் தனது மனைவியை வீட்டில்காணவில்லை என்பதால் தேடியுள்ளார்.

பல மணிநேரத்திற்கு பின், இறந்த பெண்ணின் உடலை அவர் பன்றி கூட்டிற்குள் கண்டறிந்துள்ளார்.அதிக அளவிலான ரத்த இழப்பினால் அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தசம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers