எதிர்ப்பை மீறி பிரதமராக முயற்சிக்கும் இளவரசி: சாதாரண குடிமகளாக போட்டியிடுவதாக அதிரடி

Report Print Abisha in ஏனைய நாடுகள்

தாய்லாந்தின் இளவரசி தனது சகோதரரின் எதிர்ப்பை மீறி பிரதமர்வேட்பாளராக போட்டியிட போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

தாய்லாந்தின் மறைந்த மன்னர் Bhumibol Adulyadej-லின்முதல் குழந்தையாகப் பிறந்தவர் Ubolratana. இளவரசியானஇவர், பீட்டர் ஜென்சன் என்ற அமெரிக்கரைத் திருமணம் செய்து கொண்டு அரச பதவிகளை இழந்தார்.

இந்நிலையில் இருவருக்கும் விவாகரத்தாகி தாய்லாந்து திரும்பிய Ubolratana -னின் மகன் 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் பலியாகினார். அவர் அரண்மனைக்குத் திரும்பாத நிலையில், இன்றளவிலும் அரசு குடும்பத்தினராகவே பார்க்கப்பட்டு வருகின்றது.

திரைப்படங்களில் நடிப்பது, மேடைகளில் பாடுவது, என மக்களிடையே பிரபலமான அவர் திடீரென பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கு அவரது இளைய சகோதரரும் அரசருமானVajiralongkorn எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் தாம் சாதாரண குடிமகளாக போட்டியிடுவதாக Ubolratana பதிலளித்துள்ளார். தொடர்ந்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers