ஆண்கள் அந்தரங்க உறுப்பின் தோலை நீக்கினால் எய்ட்ஸ் பாதிப்பு குறையும்: பெண் எம்பி வலியுறுத்தல்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

உலகிலேயே எச்.ஐ.வி பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் தான்சானியா 13ஆம் இடத்தில் உள்ளது.

அந்நாட்டில் எச்.ஐ.வி மிகப்பெரிய சுகாதாரச் சிக்கலாக உள்ள நிலையில், ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல்தோலை நீக்கினால் எச்.ஐ.வி பாதிப்பு குறையும் தான்சானியாவில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேக்லைன் நோங்யானி கூறியுள்ளது ஒரு பக்கம் ஆதரவு, எதிர்ப்பு என இருபக்க கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்குறியின் நுனித்தோலை அகற்றாத ஆண் உறுப்பினர்கள் உடனடியாக அந்த செய்முறைக்கு உள்ளாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆண்குறியின் நுனித் தோல் நீக்கப்பட்டால் (விருத்த சேதனம்) எச்.ஐ.வி நோய்த்தொற்று பரவுவது குறையும். இதனால் 70 சதவீத ஆண்கள் தங்கள் ஆண்குறியின் நுனித்தோலை அகற்றியுள்ளனர்.

ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்குவது எச்.ஐ.வி பரவும் வாய்ப்பை சுமார் 60% அளவுக்கு குறைக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

பல ஆப்பிரிக்க நாடுகளும் எச்.ஐ.வி கிருமி பரவுவதைத் தடுக்க ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல் தோலை அகற்ற பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

ஜேக்லைன் கூறியது அறுவறுப்பானது என்றும் பிறரது அந்தரங்க விடயங்களில் தலையிடுவதற்கு உரிமையில்லை என ஜோசஃப் கசேகு எனும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்