நான்கு குழந்தைகள் பெற்றால் இந்த நாட்டில் வருமான வரி கிடையாது! என்ன காரணம் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஹங்கேரியாவில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

ஹங்கேரியில் மக்கள் தொகை ஆண்டுக்கு 32,000 என வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இதனால் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில் அந்தநாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அந்நாட்டில் வலதுசாரி தேசியவாதிகள் ஹங்கேரியில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்க்கின்றனர்.

அதுமட்டுமின்றி ஹங்கேசியில் மக்கள்தொகையில் ஆண்டுக்கு 32,000 என வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது ஐரோப்பிய ஒன்றியத்தில் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளை சாராசரியைவிட குறைவாகும்.

இதனால் நாட்டில் சரிந்துவரும் மக்கள்தொகையை சீர்செய்யும் விதமாக, இளம் தம்பதியருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும்.

அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தபிறகு இது ரத்து செய்யப்படும். ஐரோப்பாவில் வீழ்ச்சியடையும் பிறப்பு விகிதங்களுக்கு காரணம் குடியேற்றம் தான் என்று பிரதமர் விக்டர் ஆர்பன் கூறியுள்ளார்.

மேலும் அவர், எங்களுக்கு மக்கள்தொகை என்பது எண்களாக தேவையில்லை. எங்களுக்கு ஹங்கேரிய குழந்தைகள்தான் தேவை, குடியேற்றத்தை மட்டும் சார்ந்திராமல் ஹங்கேரியின் எதிர்காலத்தை பாதுகாக்க இது ஒரு வழி எனவும் தெளிவுபடுத்தினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers