நடுவானில் திடீரென பயணிகளின் மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மஸ்கட்டிலிருந்து கோழிக்கோடு நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நேற்று திடீரென பயணிகளின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்ததால், அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானமானது 3 குழந்தைகள் உட்பட 185 பயணிகளுடன் ஓமன் நாட்டின் மஸ்கட்டிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு நோக்கி புறப்பட்டுள்ளது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் காற்றழுத்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணித்த 4 பேருக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்துள்ளது.

மேலும், விமானத்தில் இருந்த சில பயணிகளுக்கு காது வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள விமான நிர்வாகம், பயணிகள் பாதிக்கப்பட்டது தெரிந்த உடனே விமானம் அவரசரமாக தரையிறைக்கப்பட்டு, 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்கள் விமானத்தில் பயணிக்கலாம் என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுளளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers