3 அடி ஆழ பாதாள சாக்கடைக்குள் கேட்ட குழந்தையின் குரல்: ஒரு புல்லரிக்கச் செய்யும் வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்காவில் வழிப்போக்கர் ஒருவர் பாதாள சாக்கடையிலிருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்பதைக் கவனித்துள்ளார்.

அது ஒரு பூனையின் குரலாக இருக்கலாம் என்று எண்ணி அந்த பாதாள சாக்கடையின் மூடியைத் திறந்து உள்ளே இறங்கி பார்த்தபோது அது ஒரு குழந்தையின் குரல் என்று அறிந்ததும் அதிர்ச்சியடைந்த அவர், இன்னும் சற்று உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பிஞ்சுக் குழந்தை உடைகள் எதுவுமின்றி அந்த தண்ணீர் குழாய்க்குள் சிக்கிக் கிடப்பதைக்கண்டார்.

எந்த நேரமும் அந்த குழந்தை தண்ணீரில் அடித்துச் செல்லப்படலாம் என்பதை அறிந்த அவர், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவலளித்தார்.


தீயணைப்புத்துறையினருடன், பொலிசார் மற்றும் ஆம்புலன்சும் வந்து சேர, மூன்று குழுவினரும் நடவடிக்கையில் இறங்கினர்.

பாதாள சாக்கடைக்குள் இறங்கி, அந்த குழாயை கொஞ்சம் உடைத்து உள்ளே சென்று அந்த குழந்தையை மீட்டார் தீயணைப்புத்துறை வீரர் ஒருவர்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த குழந்தையை அவர் மீட்டு மற்ற வீரர்கள் கையில் கொடுக்க, அவர்கள் அதை வாங்கி டவலுடன் நிற்கும் இன்னொருவரிடம் கொடுப்பதைக் காணலாம்.

அந்த குழந்தை பாதாள சாக்கடைக்குள் கிடப்பது தெரிய வந்து மூன்று மணி நேரங்களுக்குப்பின்னரும்,அது உயிருடன் மீட்கப்பட்டதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியில் ஆராவாரம் செய்கின்றனர்.

முதலுதவிக்குப்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தை குளிரால் பாதிக்கப்பட்டிருப்பதைத் தவிர, வேறெந்த பிரச்சினையும் இல்லை என மருத்துவ உதவிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் சுமார் 3,500 குழந்தைகள் இப்படி கைவிடப்படுவதாக தெரிய வந்துள்ள நிலையில், பொலிசார் அந்த குழந்தையின் தாய் யார், எதற்காக அவர் அந்த குழந்தையை கைவிட்டார் என்பது தொடர்பான விசாரணையை துவங்கியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers