இந்தோனேசியாவில் குற்றவாளியின் கழுத்தில் பாம்புகளை விட்டு, கொடூரமான முறையில் பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் செல்போன் திருட்டு தொடர்பான வழக்கில் இளைஞர் ஒருவரை கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
குற்றம் சுமத்தப்பட்ட இளைஞரின் கைகளை கட்டிய பொலிஸார், மிகப்பெரிய பாம்புகளை அந்த நபரின் கழுத்தில் விட்டு மிரட்டுகின்றனர்.
நீ இது வரை எத்தனை செல்போன்களை திருடியிருக்கிறாய்? என சிரித்துக்கொண்டே பொலிஸார் விசாரணையை நடத்துகின்றனர்.
அதில் ஒருவர், உன் வாய் மற்றும் உள்ளாடைக்குள் பாம்புகளை விட போகிறோம் என மிரட்ட, ஏற்கனவே பயத்தில் அலறிக்கொண்டிருந்த அந்த இளைஞர் 2 முறை திருடியிருக்கிறேன் என உண்மையை ஒப்புக்கொள்கிறார்.
இந்த வீடியோ காட்சியானது இணையம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.