உலகில் சுற்றுலாவுக்கு உகந்த நாடுகளில் முதலிடம் பிடித்த இலங்கை: வெளியான பட்டியல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலக அளவில் இந்த ஆண்டு சுற்றுலாவுக்கு தகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் பிரபலமான லோன்லி பிளானட் என்ற வலைதளம் இந்த ஆண்டில் சுற்றுலாவுக்கு உகந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஜேர்மனி உள்ளது. மூன்றாவது இடத்தில் ஜிம்பாப்வே உள்ளது.

குறித்த பட்டியலில் இதுவரை சுற்றுலாவில் பிரபலமாகாத பல நாடுகள் இடம்பெற்றுள்ளது. மத்திய ஆசியாவில் உள்ள கிர்கிஸ்தான் நாடு 5-வது இடத்தில் உள்ளது. சீனாவின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள இந்த நாடானது சர்வதேச அளவில் சுற்றுலாவுக்கு பெயர்போன பட்டியலில் இதுவரை இடம்பெற்றிருக்கவில்லை.

கினியா வளைகுடாவில் அமைந்துள்ள சாவ் டோம் மற்றும் பிரின்சிபி தீவுகளும் சுற்றுலாவுக்கான பட்டியல்களில் இதுவரை சர்வதேச அளவில் இடபெறவில்லை.

சுற்றுலாவுக்கு உகந்த நாடுகளின் பட்டியல்:

  1. இலங்கை
  2. ஜேர்மனி
  3. ஜிம்பாப்வே
  4. பனாமா
  5. கிர்கிஸ்தான்
  6. ஜோர்டான்
  7. இந்தோனேசியா
  8. பெலாரஸ்
  9. சாவ் டோம் மற்றும் பிரின்சிப்பி
  10. பெலிஸ்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers