கரடிகளின் கூண்டுக்குள் சிக்கிய சிறுமி: திக் திக் வீடியோ

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் தவறி பாண்டாகளின் இடத்தில் விழுந்துவிடும் சிறுமியை மீட்கும் திக் திக் வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் பலரது கவத்தையும் ஈர்த்து வருகிறது.

சீனாவின் செங்டு பகுதியைச் சேர்ந்த உயிரியல் பூங்காவில் பாண்டாக்களை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது தடுப்புகளைத் தாண்டி நடுவில் இருக்கும் சிறிய குழியில் ஒரு சிறுமி தவறி விழுந்து விட்டாள்.

இதைப் பார்த்ததும் அங்கிருந்த மூன்று பாண்டாக்கள் அருகில் சென்று பார்த்தபடி தாக்காமல் இருந்திருக்கின்றன.

முதலில் ஒரு கம்பை வைத்து சிறுமியை மீட்க முயன்று முடியாமல் போக பூங்கா ஊழியர் ஒருவர் மிகுந்த சிரமத்துடன் அந்தச் சிறுமிக்கு கை கொடுத்து மேலே ஏற்றியுள்ளார்.

அதுவரை பாண்டாக்கள் எதுவும் செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளன. இப்படிச் சிரமப்பட்டு கைப்பற்றிய ஊழியரை மக்கள் பாராட்டிவருகின்றனர்.

வேடிக்கை பார்த்த பாண்டாக்களும் மக்களிடம் லைக்ஸை பெற்று வருகின்றன. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers