திடீரென்று உடைந்து விழுந்த விமானத்தின் படிக்கட்டு..15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த பயணிகளின் அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணிகள் உள்ளே செல்ல முயன்ற போது, எதிர்பாரதவிதமாக அங்கிருந்த படிக்கட்டு விழுந்ததால், பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் Barnaul விமானநிலையத்திலிருந்து தலைநகர் மாஸ்கோவிற்கு Ural Airlines நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று பயணிகளை உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தது.

அப்போது விமானத்தின் படிக்கட்டு எதிர்பார்தவிதமாக கீழே விழுந்து நொறுங்கியதால், 6 பயணிகள் காயமடைந்தனர்.

இதில் ஒருவருக்கு கழுத்து மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பயணிகளின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்து இல்லை எனவும், ஒரு சில பயணிகளுக்கு மட்டுமே சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, இதற்கு விமானநிலையம் தான் பொறுப்பு என்று Ural Airlines தெரிவித்துள்ளது.

பயணிகள் சுமார் 15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளனர். அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers