துஷ்பிரயோகம் செய்ய முயன்றவரின் மர்ம உறுப்பை வெட்டி வீசிய 14 வயது சிறுமி: பரபரப்பு சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தன்னை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரின் மர்ம உறுப்பை 14 வயது சிறுமி வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் கட்சினா மாகாணத்தில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது குறித்த தகவலை ஹவுவா ஷபி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், கட்சினா மாகாணத்தில் 14 வயது சிறுமி கிட்டத்தட்ட ஆண் ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.

பின்னர் பிளேடால் அந்த சிறுமி தன்னை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரின் மர்ம உறுப்பை வெட்டி வீசினார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் நீதிமன்றத்தில் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி ஆஜர்படுத்தப்படவுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்