ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அடித்து தரையில் சாய்த்த பெண்: வைரல் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சிறந்த ஜூடோ வீரர்களுடன் பயிற்சி பெரும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நேற்று இரவு ஜூடோ போட்டியில் சிறந்த வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார்.

ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற நடாலியா குசியுதினாவுடன், அதிபர் போட்டி போடும் போது அவருடைய கை விரலில் லேசான காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவருடைய உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து பேசிய அதிபர், 'இது ஒரு நன்கு அறியப்பட்ட மருத்துவ உண்மை. இதுபோன்ற உடல் பயிற்சிகளை மேற்கொள்ளும் ஒரு நபரில் அட்ரினலின் நிலை அதிகரிக்கிறது. எனவே உங்கள் மனநிலை மேம்படுகிறது..

மேலும் உங்களைச் சுற்றியுள்ள உலகில் நீங்கள் ஒரு வித்தியாசமான தோற்றத்தை பார்ப்பீர்கள். உங்களை உண்மையுள்ளவராக மாற்ற இது உதவி செய்யும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்