900 பேரை பலிகொண்ட அம்மை நோய்! சுற்றுலா பயணிகளுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சுற்றுலாவுக்குப் பேர் போன ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் அம்மை நோய் பரவி வருவதையடுத்து 900 பேர் பலியாகியுள்ளனர்.

ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பு மடகாஸ்கரில் குறைந்தது 922பேர் measles என்னும் மணல்வாரி அம்மை நோய்க்கு பலியாகியுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், மடகாஸ்கரில் செப்டம்பர் முதல் பரவிவரும் அம்மைத் தொற்றால் 66,000 பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு மடகாஸ்கரில் உள்ள 6 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் ஒன்றைத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்