களமிறங்கிய இந்தியா: குண்டு மழை பொழியும் விமானங்கள்! வெளியானது வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தியாவில் நடந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்க, இந்திய விமானப் படையினர் பாகிஸ்தான் எல்லை அருகே போர் ஒத்திகை நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் துணை இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிராதி நடத்திய தாக்குதலால், 45 பேர் பரிதாபமாக பலியாகினர்.

வீரர்களை பறிகொடுத்த குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவுமே இது போன்று கொடூரத்தனமான தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று குரலகள் எழுந்து வருகின்றன.

இந்திய இராணுவமும் இதை நாங்கள் மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம், நிச்சயமாக திருப்பி பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் எல்லை அருகே, இந்திய விமானப் படையினர் போர் ஒத்திகை நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை ஒட்டியுள்ள ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் விமானப் படை சார்பில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

இதில் அனைத்து வகையான போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இரவு பகலாக பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சுமார் 137 விமானங்களும் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்து வருகின்றன.

தவிர, இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை, வான்வழி ஏவுகணை சோதனையும் நடத்தப்பட்டது.

இதனால் புல்வாமா தாக்குதலில் சந்தித்த மிகப்பெரிய இழப்புக்கு எப்போது வேண்டுமானாலும் இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்