பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த வேண்டும்....பொறுத்தது போதும்: உலக நாடுகள் ஆதரவு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
518Shares

புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுப்பதற்கு உதவியாக இருப்போம் என உலகநாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

அமெரிக்கா

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது தற்காப்பு உரிமையை பாதுகாக்க முழு ஆதரவையும் தர உள்ளதாகவும் டிரம்ப் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

பாகிஸ்தான் மீது வான்வழியாக இந்தியா தாக்குதல் நடத்தினாலும் அதற்கு உதவுவதில் எந்த தயக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

பலோசிஸ்தான்

நீதி கிடைத்தாக வேண்டும். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும், அப்பாவி மக்களை கொல்வதற்காகவும் பாகிஸ்தான் விலை கொடுக்க வேண்டிய நேரம் இது என பலோசிஸ்தான் அதிபர் தெரிவித்துள்ளார்.

ஈரான்

கடந்த சில நாட்களாக இந்தியாவும், ஈரானும் 2 பயங்கரவாத தாக்குதல்களால் மிகப் பெரிய துயரத்தை சந்தித்துள்ளன. பொறுத்தது போதும். பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்