40 வீரர்களின் மரணம்: முன்கூட்டியே அமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு!!!

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவத்தினர் மீது தற்கொலை தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தற்கொலை தாக்குதல் நடத்திய அகமது தார் என்பவனின் உடல் 80 மீட்டர் தூரத்தில் காணப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷி முஹமத் இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.

சி.ஆர்.பி.எஃப் செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் குமார் ஜா நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், வீரர்கள் பயணிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டது. அந்த நெடுஞ்சாலையில் இப்படியொரு தாக்குதல் நடக்க வாய்ப்பே கிடையாது.

இந்தப் பகுதியில் நிறைய சோதனைச் சாவடிகள் உள்ளன. அவை அத்தனையையும் தாண்டி நூற்றுக்கணக்கான கிலோ அளவுள்ள வெடிப்பொருள்களைக் எடுத்துவர முடியாது. பாதுகாப்புப் பணிகளில் ஏதோ தவறு நடந்துள்ளது. இல்லையென்றால், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது என கூறியுள்ளார்.

தீவிரவாதிகள் எந்தநேரத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் எங்களுக்குக் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கிடையில் தாக்குதல் நடப்பதற்கு முந்தைய நாள் அமெரிக்க நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில் இந்த சம்பவதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 13 ஆம் தேதி அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு வெளியிட்ட பயண எச்சரிக்கை குறிப்பில், காஷ்மீர் பகுதிக்கு செல்லாதீர்கள், அங்கு ஆயுத சண்டைக்கான வாய்ப்பிருக்கிறது என கூறியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...