போர் ஒரு தீர்வாகாது: பதாகைகளுடன் களமிறங்கிய பாகிஸ்தான் இளம்பெண்கள்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் இளம்பெண்கள் பதாகைகளுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலானது ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசார் என்பவரால் துவங்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என கூறப்பட்டு வருகிறது.

மேலும் இது பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரிலே நடந்திருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகிறார். அதற்கு மறுப்பு தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் நேற்று வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தானிய ஊடகவியலாளர் சௌர்ர் மிர்ஸா, புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பதாகையுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இந்தியாவில் அப்பாவி உயிர்கள் பலி போவதற்கு காரணமான பயங்கரவாத தாக்குதலால் நாங்கள் பெரும் கவலையடைந்துள்ளோம். இதுபோன்ற சோதனையான சமயங்களில் போருக்கும், பயங்கரவாதத்திற்கும் எதிராக நாம் இன்னும் அதிகமான குரல்களை எழுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் போருக்கு எதிராகவும், அமைதியை நிலைநாட்டவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அந்த பதிவில் அவருடன் சேர்ந்து சில பாகிஸ்தானிய இளம்பெண்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers