புல்வாமா தாக்குதல் இந்தியாவில் திட்டமிடப்பட்டது: பாகிஸ்தான் ராணுவ தலைமை தகவல்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

புல்வாமா தாக்குதல் இந்தியாவில் திட்டமிடப்பட்டது என பாகிஸ்தானின் சிவில் மற்றும் இராணுவ தலைமை தகவல் வெளியிட்டுள்ளது.

காஷ்மீரில் கடந்த 14-ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இதற்கு பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகம்மது என்கிற பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் செய்த சதிச்செயல் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் குற்றம் சுமத்தியிருந்தார்.

ஆனால் இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுப்பு தெரிவித்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டதல்ல, இந்தியாவில் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு இந்தியாவுடன் ஒத்துழைக்க தயார் என பாகிஸ்தானின் சிவில் மற்றும் இராணுவ தலைமை தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்