தாயாரை கொன்று நாய்க்கு உணவாக்கிய கொடூர மகன்: இளைஞரின் ஒப்புதல் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டில் சொந்த தாயாரை கொன்று வளர்ப்பு நாய்க்கு உணவாக்கிய மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தலைநகர் மாட்ரிடில் வியாழன்று குறித்த 26 வயது இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட 66 வயது தாயாரின் நண்பர் ஒருவர், கடந்த ஒருமாத காலமாக அவர் திடீரென்று மாயமானதாக கூறி பொலிசாரை அணுகியுள்ளார்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் அவரது குடியிருப்பை சோதனையிட்டுள்ளனர்.

அதில் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட மாமிசங்களை கண்டெடுத்துள்ளனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த இளைஞர் நடந்தவற்றை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்புவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். மட்டுமின்றி அந்த இளைஞரின் நாயை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் மீது ஏற்கெனவே 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெரும்பாலும் தனது தாயாரை தாக்கியதாகவே வழக்கு பதிவாகியுள்ளது.

இவர்களது குடியிருப்பின் அருகாமையில் உள்ள மதுபான விடுதிக்கு வாடிக்கையாக சென்றுவரும் குறித்த பெண்மணி திடீரென்று சில வாரங்களாக காணவில்லை என்பதாலையே நண்பர் ஒருவர் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.

கைது செய்யப்பட்ட கொலைகார மகனிடன் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்