பணத்துக்காக வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்? வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நைஜீரியாவை சேர்ந்த 31 வயது இளைஞர் 79 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

காதலுக்கு கண் இல்லை என்பதற்கு ஏற்றார் போல நடந்துள்ள இச்சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்த 31 வயதான ஆணுக்கும், அதே நாட்டில் வசிக்கும் oyinbo எனப்படும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இனத்தை சேர்ந்த 79 வயது பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.

இருவரும் தீவிரமாக காதலித்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

79 வயது பாட்டியை இளைஞர் திருமணம் செய்து கொண்டது எதற்காக என இணையதளவாசிகள் பலரும் விவாதித்து வருகிறார்கள்.

அதாவது பணத்துக்கு ஆசைப்பட்டு பாட்டி வயது பெண்ணை இளைஞர் மணந்திருக்கலாம் என ஒரு சாரார் கூறுகிறார்கள்.

அதே போல கிரீன் கார்டுக்காக இளைஞர் இப்படி செய்திருக்கலாம் என சிலர் கூறும் நிலையில், இதுவும் காதல் தான் என சிலர் கூறி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்