தன்னை போன்றே உருவத்தில் இருக்கும் பெண்ணிடம் கணவன் தொடர்பில் இருப்பதை கண்டுப்பிடித்த மனைவி... நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணுடன் கணவர் தொடர்பில் இருப்பதை அறிந்த மனைவி அப்பெண்ணை கொடூரமாக எரித்து கொலை செய்த சம்பவத்தின் வழக்கு முடிவுக்கு வரவுள்ளது.

ஈவ்ஜென்சி என்ற நபர் தனது மனைவி இலினா ரொமனோவா (36) என்பவருடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் அச்சு அசல் இலினா போலவே உருவத்தில் இருக்கும் மரியா ஷொகோலோவா (32) என்ற பெண்ணுடன் ஈவ்ஜென்சிக்கு தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து 5 வருடத்துக்கு முன்னர் இலினா மற்றும் மரியா ஆகிய இருவருக்குமே காதலர் தினத்தன்று ஈவ்ஜெசி பரிசளித்தார்.

அப்போது தான் தனது கணவரின் தொடர்பு இலினாவுக்கு தெரியவந்தது.

மேலும் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வதையும் இலினா கண்டுப்பிடித்தார்.

இது குறித்து மரியாவிடம், இலினா கேட்ட போது, உன் கணவர் ஈவ்ஜென்சியிடம் இருந்து உன்னை பிரித்து காட்டுகிறேன் பார் என மரியா சவால் விட்டார்

இதனால் மரியா மீது ஆத்திரம் கொண்ட இலினா அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அதன்படி நபர் ஒருவர் உதவியுடன் மரியாவை தனது காரில் கடத்தினார் இலினா.

பின்னர் பயங்கரமாக அவரை தாக்கிய இலினா, மரியா கழுத்தை துணியால் இறுக்கமாக கட்டி காட்டு பகுதிக்கு காரை ஓட்டி சென்றார்.

கார் காட்டுப்பகுதியில் நின்ற நிலையில் மரியாவை கீழே இறக்கிவிட்டு அவரை உயிரோடு எரித்து கொலை செய்தார்.

இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இலினாவை போன்றே தோற்றம் கொண்ட மரியா, அவராலேயே கொல்லப்பட்டார் என உள்நாட்டு பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன.

இதையடுத்து பொலிசார் இலினாவை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இலினா குற்றவாளி என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் விரைவில் தண்டனை விபரத்தை நீதிமன்றம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியும் இலினாவுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்