இந்திய விமானி கைது என அதிகாரபூர்வ அறிவிப்பு...அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என திடுக்கிடும் தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இன்று காலை மிக் 21 விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமான படை கமேண்டோ அபிநந்தன் இன்னும் திரும்பவில்லை என்று இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ராவேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தியா மீது பாகிஸ்தான் விமான படையும், பாகிஸ்தான் மீது இந்திய விமான படையும் மாறி மாறி எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இன்று காலை பாகிஸ்தானின் எப்-16 போர் விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் புகுந்த பின் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல் 2 எப்-16 விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானும் எல்லை தாண்டிய இந்திய விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, பாகிஸ்தான் பொய் சொல்கிறது என்று இந்திய விமானப்படை மறுத்தது.

இதற்கு இடையில் இன்று காலை மிக் 21 விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை காமேண்டோ அபிநந்தன் இன்னும் திரும்பவில்லை என்று இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ராவேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அபிநந்தன் எங்கே இருக்கிறார் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையில் விமானி அபிநந்தன் தமிழகத்தின் திருவண்ணாமலையை பூர்விகமாக கொண்டவர் என்றும் சென்னை சேலையூரை அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தாம்பரத்தில் தனது பயிற்சியை முடித்த அவர், 2004 முதல் விமான படையில் பைலட்டாக பணிபுரிந்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்