இந்திய விமானி சிறைபிடிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பரபரப்பு பேட்டி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பிரச்சனை தீவிரம் அடைந்தால் இருநாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் இருநாடுகளும் விவேகத்துடன் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தற்போது பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அளித்துள்ள பேட்டியில், புல்வாமா தாக்குதல் குறித்து ஆதாரங்களை தந்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினோம். எங்கள் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்காக நாங்கள் பதில் நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

ஏனெனில் எங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக நாங்கள் எண்ணவில்லை. எங்கள் பகுதியில் அதிகமான பாதிப்புகள் இல்லாதபோது, இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எங்களால் திருப்பி தாக்க முடியும் என்பதை நிருபிக்க மட்டுமே பாகிஸ்தான் விமானங்கள் இன்று தாக்குதல் நடத்தின.

தவறான கணிப்பால் தான் போர்கள் நடக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளிடமும் தற்போது ஆயுதங்கள் உள்ளன. நாங்களும் தவறாக கணித்தால், நாம் போரில் ஈடுபடும் சூழல் ஏற்படும். பிறகு நானோ, நரேந்திர மோடியோ எதையும் கட்டுப்படுத்த முடியாது. அதனால் தான் சரியான புரிதல் வேண்டும். தீவிரவாத பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாங்கள் தயாராக உள்ளோம் என கூறியுள்ளார்.

இதனிடையில் விமானியை மீட்க தூதரக ரீதியான நடவடிக்கையை இந்திய அரசு தொடங்கியுள்ளது.

அதன்படி இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணை தூதர் சையத் ஹைதர் ஷாவுக்கு சம்மன் அனுப்பி வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்மனை அடுத்து ஹைதர் வெளியுறவு அமைச்சகத்தில் ஆஜராகியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்