சவுதி தூதரக அதிகாரி கொலை வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வங்காளதேசத்தில் சவுதி அரேபியா நாட்டு தூதரக அதிகாரியை கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வங்காளதேசம் நாட்டுக்கான சவுதி அரேபியா தூதரகத்தில் பணியாற்றி வந்தவர் 45 வயதான கலாப் அல் அலி. தலைநகர் டாக்காவில் உள்ள குல்ஷான் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி அன்று ஒரு கும்பலால் கலாப் அல் அலி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு டாக்கா விரைவு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர், இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் 4 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட ஒரே குற்றவாளியான சைபுல் இஸ்லாம் மாமுன் என்பவருக்கு காசிப்பூரில் உள்ள மத்திய சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்