7 முறை கருச்சிதைவு.... இன்னும் குழந்தை பிறக்கவில்லையா என கிண்டலடித்த நண்பர்கள்.... தம்பதி எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கானா நாட்டை சேர்ந்தவர் நிகோலஸ் லர்பி (34). இவருக்கும் சாரா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் 7 முறை சாராவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.

அவர் வயிற்றில் ஒரு முறை கூட கரு தங்கவில்லை, இதனால் குழந்தை பிறக்காத ஏக்கத்தில் நிகோலசும், சாராவும் தவித்து வந்தனர்.

மேலும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களும் ஏன் இன்னும் உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என அடிக்கடி கேட்டு வந்தனர். சிலர் இது சம்மந்தமாக தம்பதியை கிண்டலடித்துள்ளனர்.

இதன் காரணமாக மன அழுத்தம் அடைந்த தம்பதி தங்களது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தனர்.

அப்போது நிகோலசின் தந்தை ஆடம் அங்கு வந்த போது தனது மகனும், மருமகளும் சுயநினைவின்றி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இருவரையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் சமுதாயம் கொடுக்கும் அழுத்தங்களுக்காக இது போன்ற தவறான முடிவுகளை எந்த தம்பதியும் எடுக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்