உலகின் இந்த 187 நாடுகளில் குழாய் குடிநீரை பருகாதீர்கள்: எச்சரிக்கும் சுகாதார ஆய்வு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இலங்கை, இந்தியா முதல் உலகின் 187 நாடுகளில் உள்ள எஞ்சியிருக்கும் குடிநீர் பாழ்பட்டுள்ளதாகவும், இதனால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகின்றது.

தற்காலத்தில் நாடுவிட்டு நாடு செல்வதும் கண்டம் விட்டு கண்டங்கள் பயணிப்பதும் மிகவும் எளிதாக மாறியுள்ளது.

ஒருகாலத்தில் சாகச விரும்பிகள் மட்டுமே பயணங்களை விரும்பிய நிலையில் தற்போது மிக சாதாரணமாக லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் சுற்றுலா பயணங்களில் ஏற்படுகின்றனர்.

இது ஆசிய நாடுகள் முதல் அவுஸ்திரேலியா வரையும், ஆப்பிரிக்கா முதல் அண்டார்டிகா வரையும் நீள்கிறது.

ஆனால் வெளிநாடுகளில் செல்லும் மக்களுக்கு எப்போதுமே சுகாதாரம் தொடர்பில் சின்ன குழப்பம் ஏற்படுவது உண்டு. முக்கியமாக குடிநீர் தொடர்பில் இந்த அச்சம் எழுவது உண்டு.

இந்த நிலையில் தனியார் சுகாதார அமைப்பு ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையானது கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதில் உலகில் உள்ள 187 நாடுகளில் குழாய் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல எனவும், சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனால் டைபாய்டு மற்றும் மலேரியா பாதிப்புக்கு உள்ளாகலாம் எனவும் எச்சரித்துள்ளது.

குறித்த பட்டியலில் பெரும்பாலும் வளரும் நாடுகளே இடம்பெற்றுள்ளன. இலங்கை, இந்தியா, அப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, வடகொரியா, நேபாளம் என மொத்தம் 187 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் உள்ள குடிநீர் மொத்தமாக பாழ்பட்டது என கூற முடியாது என குறிப்பிட்டுள்ள அந்த ஆய்வில், சுற்றுலா பயணிகளுக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம் என்றே சுட்டிக்காட்டியுள்ளனர்.

மட்டுமின்றி, மத்திய அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் குடிநீர் மிகவும் பாழ்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளான இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளில் குடிநீர் பாதுகாப்பாக உள்ளது எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்