உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க், பின்லாந்து, நார்வே நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.

சர்வதேச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. குறிப்பாக இந்த ஆய்வு மிக மகிழ்ச்சியான நாடுகள் எவை என்பது குறித்து நடத்தப்பட்டதாகும்.

இந்த ஆய்வுப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பின்லாந்து இரண்டாவது இடத்தையும், நார்வே 3வது இடத்தையும், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் 4,5ஆம் இடங்களையும் பிடித்துள்ளன.

இந்த நாடுகளில் எல்லாம் மக்களின் வாழ்க்கைத் தரம் அமோகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. புள்ளிகள் அடிப்படையில் 10க்கு தலா 7.5 புள்ளிகளை முதல் ஐந்து நாடுகள் பெற்றுள்ளன.

இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளன. அமெரிக்கா 6.9 புள்ளிகளையும், பிரித்தானியா 6.7 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

மேலும் இந்த ஆய்வறிக்கையில், வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் மிக அதிகளவில் பணம் சம்பாதிக்கின்றனர். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர்.

அந்த நாடுகளின் அரசும் நல்ல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றுக்கிறது. அதன் மூலமே, குறித்த நாடுகளில் வாழும் மக்கள் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers