ஆபத்து காப்பாற்றுங்கள்: விமானி கேட்ட கடைசி உதவி.... சில நொடிகளில் விழுந்து நொறுங்கிய விமானம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

கொலம்பியாவின் நேற்று தனியார் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.

விமானம் விபத்துக்குள்ளானபோது சான் மார்டின் நகரத்தின்மீது பறந்துகொண்டிருந்தது. கடைசி நேரத்தில் என்ஜினை மாற்றி தரையிறக்குவதற்கு விமானி முயன்றுள்ளார்.

ஆனால், விமானம் கட்டுப்பாட்டு இழந்ததோடு மட்டுமல்லாமல் வானிலையும் சாதகமாக இல்லை. ஆபத்து காப்பாற்றுங்கள் என்ற கடைசி அழைப்பை போக்குவரத்துத் துறையின் எமர்ஜென்ஸி சேவைப் பிரிவுக்கு தெரிவித்த சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்விமானத்தில் உயிரிழந்த 14 பேரில் லுப்ஸ் மாகாணத்திற்குட்பட்ட டரைரா நகரசபை மேயர் டோரிஸ் வில்லேகாஸ் மற்றும் அவரது கணவர் மற்றும் மகள், இவர்கள் தவிர விமானத்தில் பயணித்த அவ் விமானத்தின் உரிமையாளர், விமானத்தை ஓட்டிச் சென்ற ஜெய்ம் காரில்லோ, இணை விமான ஜெயிம் ஹெர்ரெரா மற்றும் விமான தொழில்நுட்ப நிபுணர் அலெக்ஸ் மேரேனோ ஆகியோர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers