157 பேரை காவு வாங்கிய பயணிகள் விமானம் தொடர்பில் வெளிவரும் பகீர் பின்னணி தகவல்!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 157 பேரை காவு வாங்கிய விமானம் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடிஸ் அபாபாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 8.38 மணிக்கு புறப்பட்டு சென்ற எத்தியோப்பிய ஏர்வேஸ் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையில் விழுந்து நொறுங்கியது.

இதில் பயணம் செய்த 33 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் 149 பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் சிக்கிய இந்த விமானமானது போயிங் நிறுவனத்தின் 737 Max-8 வகையை சேர்ந்ததாகும்.

தற்போது இந்த விபத்து தொடர்பில் உன்னிப்பாக கவனித்துவருவதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

737 Max-8 வகை விமானமானது கடந்த 2016 ஆம் ஆண்டில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியே எத்தியோப்பிய விமான சேவை நிறுவனத்தில் குறித்த விமானங்கள் பயன்பாட்டுக்கு இணைக்கப்பட்டது.

இந்த விமானமானது மொத்தம் 39.52 மீற்றர் நீளம் கொண்டவையாகும். இரண்டு இறக்கைக்கும் இடைப்பட்ட தூரம் என்பது 35.3மீற்றர்.

மொத்தம் 210 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானது.

அதில் பயணம் மேற்கொண்ட மொத்தம் 190 பயணிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

எத்தியோப்பிய விமானமானது தரையில் விழுந்து வெடித்துச் சிதறியதாகவும், அதன் அருகாமையில் செல்ல முடியாமல் போனது எனவும் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி சுமார் 8 மணியளவில் நடந்த இந்த விபத்தை அடுத்து மீட்புக்குழுவினரும் தீயணைப்பு வீரர்களும் சுமார் 11 மணியளவிலேயே சம்பவயிடத்திற்கு வந்து சேர்ந்தனர் எனவும் விபத்தை நேரில் பார்த்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers