157 பேரின் கோர மரணம்: என் அம்மாவுக்காக காத்திருக்கிறேன்.... இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்ணீரில் கரையும் உறவினர்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

எத்தியோப்பியாவில் 157 பேருடன் விமானம் விபத்துக்குள்ளாகியிக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதில் பயணித்த தங்களுடைய உறவுகள் திரும்பி வருவார்கள் என்ற ஏக்கத்தில் உறவினர்கள் அனைவரும் கண்ணீரில் மிதந்து வருகின்றனர்.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 157 பயணிகளுடன், இன்று காலை 8.38 மணிக்கு புறப்பட்ட எத்தியோப்பிய ஏர்வேஸ் விமானம் அடுத்த சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 33 நாடுகளைச் சேர்ந்த 157 பேருமே இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விமானத்தில் பயணித்த தங்களுடைய உறவுகள் நிச்சயம் உயிருடன் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களுடைய உறவினர்கள் எத்தியோப்பிய விமான நிலையில் கண்ணீருடன் காத்துக்கிடக்கின்றனர்.

இதுகுறித்து விமான நிலையத்தில் தொலைபேசியுடன் அழுதுகொண்டிருந்த வின்டி ஓட்டெனோ கூறுகையில், "நாங்கள் என் அம்மாவிற்காக காத்திருக்கிறோம், அவள் வேறொரு விமானத்தில் பயணித்திருக்க அல்லது தாமதமாகியிருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால் இன்னும் அவர் ஃபோனை எடுக்கவில்லை" என கண்ணீருடன் கூறியுள்ளார்.

சகோதரருக்காக காத்திருந்த ஆக்னஸ் முய்ளூ கூறுகையில், "என் சகோதரனைப் அழைத்து செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தேன், ஆனால் ஒரு பிரச்சனை நடந்திருப்பதாக நான் கேள்விப்பட்டேன்.

"அவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அல்லது அந்த விபத்தில் சிக்கியிருக்க கூடாது என்ற நான் பிரார்த்தனை செய்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் அலுவலகம் இன்று காலை ட்வீட் செய்ததாவது: "பிரதமர் அலுவலகம், எதியோப்பியாவின் அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக, வழக்கமாக சென்று வரக்கூடிய எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானத்தில் தங்கள் அன்பானவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு மிக ஆழமான இரங்கல் தெரிவிக்க விரும்புகிறது" என பதிவிடப்பட்டிருந்தது.

ராபர்ட் முடாந்தா (46) கனடாவிலிருந்து வரும் அவருடைய மைத்துனரை அழைப்பதற்காக காத்திருந்தார் கூறுகையில், "இல்லை, நாங்கள் ஏர்லைன்ஸ் அல்லது விமான நிலையத்திலிருந்து இன்னும் யாரையும் பார்க்கவில்லை. யாரும் எங்களுக்கு எதுவும் சொல்லவில்லை. நம்பிக்கையுடன் நாங்கள் இங்கு காத்துக்கொண்டிருக்கிறோம்" என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்