157 பேரை பலிவாங்கிய விமான விபத்து... முதன் முறையாக தந்தையாகும் இளைஞரும் பலியான சோகம்: வெளியாகும் கண்ணீர் கதை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 157 பேரை பலிவாங்கிய விமான விபத்தில் பலியான இளைஞர் ஒருவர் அடுத்த ஒரு மாதத்தில் தந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரியாவின் வியன்னா பகுதியை சேர்ந்த நண்பர்கள் மூவர் ஒன்றாக மருத்துவம் படித்து தற்போது பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த மூவரும் சுற்றுலா வந்த இடத்தில் அடிஸ் அபாபாவில் நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஒருவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்றும், அடுத்த 30 நாட்களில் அவர் பிள்ளை பெறவிருப்பதும் தெரியவந்துள்ளது.

முதன் முறையாக தாம் தந்தையாக இருப்பது தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியுடனும் பல கனவுகளுடனும் இருந்த அந்த இளைஞர் விமான விபத்தில் கொல்லப்பட்டது அவரது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.

ஆஸ்திரியாவை சேர்ந்த ஆர்மின் எஸ். (31), வொல்ப்காங் இ. (30) மற்றும் கிறிஸ்டோப் எஸ். (31) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள்.

மூவருமே வியன்னாவில் மருத்துவம் முடித்து தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் ஆர்மின் என்பவர் லின்ஸ் நகரில் உள்ள துறவியர்கள் நடத்தும் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியில் சேர்ந்துள்ளார்.

இவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அடுத்த 30 நாட்களில் ஆர்மின் முதன் முறையாக தந்தையாக உள்ளார்.

இந்த நிலையிலேயே தமது நெருங்கிய நண்பர்கள் இருவருடனும் இணைந்து மூன்று வர கால சுற்றுலாவுக்கு திட்டமிட்டு, ஆப்பிரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் நேற்று நடந்த எத்தியோப்பிய விமான விபத்தில் இந்த நண்பர்கள் மூவரும் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers