£400,000 பணத்தை பெறுவதற்காக கையை துண்டாக வெட்டி கொண்ட இளம்பெண்... அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

காப்பீடு பணத்தை பெறுவதற்காக கையை வெட்டிக்கொண்டு நாடகமாடிய இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Slovenia நாட்டை சேர்ந்த 21 வயது பெண் தனது மூன்று உறவினர்களுடன் சேர்ந்து 5 காப்பீடு நிறுவனங்களில் வாழ்நாள் மற்றும் விபத்து தொடர்பான காப்பீடு ஒப்பந்தத்தை போட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த காப்பீடு நிறுவனங்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டன.

அதாவது, தங்கள் நிறுவனத்தில் காப்பீடு செய்தவர்கள் விபத்தில் சிக்கி ஊனமானால் அவர்களுக்கு £400,000 பணம் கொடுக்கப்படும் மற்றும் வாழ்நாள் முழுவதும் மாதா மாதா £3000 வழங்கப்படும் என தெரிவித்தது.

இதையடுத்து காப்பீடு நிறுவனத்தில் ஒப்பந்தம் போட்ட பெண், மோசடி வேலை செய்து அந்த பணத்தை பெற முடிவு செய்தார்.

அதன் படி தன்னுடைய உறவினர்கள் உதவியுடன் தனது மணிக்கட்டின் பகுதியை தனியாக வெட்டி கொண்டார்.

வெட்டப்பட்ட பகுதியை வீட்டிலேயே வைத்துவிட்டு மருத்துவமனைக்கு அப்பெண் சென்றார்.

காரணம், கையை இழந்து ஊனமானால் தான் காப்பீடு தொகை கிடைக்கும் என அப்படி செய்தார்.

மருத்துவர்கள் அவர் வேண்டுமென்றே இப்படி செய்தார் என்பதை கண்டுப்பிடித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் அந்த பெண் வீட்டுக்கு சென்று கையின் பகுதியை எடுத்துகொண்டு மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் அவர் மணிக்கட்டு பகுதியில் சிகிச்சையின் மூலம் கை ஓட்டப்பட்டது.

இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தனது ஏமாற்று வேலையை அவர் ஒப்பு கொண்டார்.

இதை தொடர்ந்து கையை வெட்டி கொண்ட பெண் உட்பட 4 பேரை பொலிசார் கைது செய்தனர்.அவர்களில் இருவர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மற்ற இரண்டு பெண்களுக்கும் 8 ஆண்டுகள் வரை இவ்வழக்கில் சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்