மது போதையில் கழிவறையில் குழந்தை பெற்ற பெண்... தனியாக வந்த தொப்புள் கொடி.. பின்னர் செய்த அதிர்ச்சி செயல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் குடிபோதையில் இருந்த பெண் கழிப்பறையில் குழந்தை பெற்ற நிலையில் குழந்தையை உடனடியாக குப்பை தொட்டியில் போட்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யுலியா என்ற பெண் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தனது வீட்டில் மது விருந்து நடத்தியுள்ளார்.

இதில் நண்பர்களுடன் மது அருந்திய யுலியா பின்னர் கழிப்பறைக்கு சென்றார்.

அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையை பிளாஸ்டிக் பை உள்ளே வைத்த யுலியா அதை சாலையில் உள்ள குப்பை தொட்டியில் போட்டுள்ளார்.

இதன் பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

இந்நிலையில் குப்பை தொட்டியில் குழந்தை இருப்பதை பார்த்த சிலர் அதிர்ந்து போய் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அங்கு குழந்தையின் சில உடலுறுப்புகள் செயழிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து பொலிசார் யுலியாவை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

பொலிசில் யுலியா அளித்த வாக்குமூலத்தில், அந்த குழந்தையை நான் விரும்பவில்லை, அதன் தொப்புள் கொடியை கூட நான் அறுக்கவில்லை, அது தானாகவே விழுந்தது என கூறியுள்ளார்.

தனக்கு பிறந்தது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று கூட யுலியா பார்க்காமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்