157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: முகம் பார்க்காமல் தவிக்கும் இதயம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து 149 பயணிகள் மற்றும் 8 பேர் கொண்ட குழுவுடன் புறப்பட்ட போயிங் 737 விமானம் 6 வது நிமிடத்திலேயே தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த 159 பேரும் உயிரிழந்தனர்.

இதில், கென்யாவை சேர்ந்த 32 பேர் உயிரிழந்தனர். John Quindos என்ற வயதான நபரின் குடும்பத்தை 5 பேரும் உயிரிழந்துள்ளதால் எனது இதயம் நெருப்பாக இருக்கிறது என சோர்ந்து போய் இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக இவரது வீட்டின் அருகே உறவினர்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர்.

John Quindos இன் மகள் கனடாவில் வசித்து வருகிறார். அவருக்கு 3 பிள்ளகைள் மற்றும் ஒரு பேரக்குழந்தையும் உள்ளது. பேரக்குழந்தை பிறந்து 9 மாதம் ஆகிவிட்ட நிலையில்,ஒருமுறை கூட John Quindos தனது பூட்டப்பிள்ளையின் முகத்தை பார்ததில்லை.

இதனால், மகள் மற்றும் பூட்டப்பிள்ளையின் வருகைக்காக வீட்டினை அலங்கரித்து காத்திருந்துள்ளனர். மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்து ஒவ்வொருவரும் வெவ்வேறு நாட்டில் வசித்து வருவதால், அவ்வப்போது தங்களை வந்து குழந்தைகள் பார்ப்பதுதான் இவர்கள் வாழ்வின் மகிழ்ச்சியாக இருந்துள்ளது.

அப்படி, தன்னை பார்க்கவரும் மகள் மற்றும் பேரக்குழந்தைகளை வரவேற்பதற்காக கென்ய விமான நிலையத்தில் காத்திருந்த அவருக்கு இடிபோல் வந்து விழுந்தது அந்த விமான விபத்து செய்தி.

அதனை கேட்டவுடன், இதயம் நெருப்பாக மாறியதுபோல் உணர்ந்த அவர், நேராக வீட்டிற்கு சென்று நிம்மதி இழந்து தினம் தினம் அழுதுகொண்டிருக்கிறார். இவருக்கு ஆறுதல் சொல்ல அருகில் வசிப்பவர்கள் அவ்வப்போது வந்து செல்கின்றனர்.

John Quindos மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் பள்ளியில் பணியாற்றி அதன்பின்னர் பணி ஓய்வுக்கு பின்னர் அரசியலில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்