மனித உரிமைகளுக்காக போராடிய வழக்கறிஞருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை.... 145 கசையடி விதித்த நீதிமன்றம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மனித உரிமைகளுக்கான வழக்கில் ஆஜராகி போராடிய பெண் வழக்கறிஞருக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 145 கசையடிகளும் விதித்து ஈரான் நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமைகளுக்கான வழக்குகளில் ஆஜராகி வாதாடும் நஸ்ரின் சோட்டேஹே என்கிற வழக்கறிஞர் பெண் விடுதலைக்காகவும், மரண தண்டனைகளுக்கு எதிராகவும் குரல்கொடுத்து வந்தார்.

இவர் ஈரானில் உளவு பார்ப்பதாகவும், உயர்மட்ட தலைவர்களை அவமதித்து பேசி வருவதாகவும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற இப்ராஹிம் ரெய்சி, முன்னிலையில் இந்த வழக்கு திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, நஸ்ரினுக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனையும் 145 கசையடி தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

ஐரோப்பிய நீதிமன்றத்தால் சாகரோவ் மனித உரிமைகள் பரிசினை பெற்றிருந்த நஸ்ரின், முன்னதாக 2010ம் ஆண்டு நாட்டிற்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் 3 வருடங்களிலே வெளியில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்