சுட்டு கொல்லப்பட்ட பெண் திடீரென உயிர் பெற்ற சம்பவம்: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கொலம்பியாவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின்பேரில் விரைந்து வந்த பொலிசார் தடயவியல் ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் உயிர் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் Carmen Andrea Mendez (33) என்னும் பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு தரையில் விழுந்து கிடக்கிறார்.

தடயவியல் அதிகாரிகள் அவரைச் சுற்றி சாக்பீஸால் வரைந்து கொண்டிருக்கும்போது திடீரென அவரது கை அசைய, அதிர்ச்சியடைகிறார்கள்.


உடனடியாக ஓடி வரும் மருத்துவ உதவிக் குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள்.

ஆனால் Carmen துப்பாக்கியால் சுடப்பட்டு விழுந்து கிடந்தபோது அங்கு வந்த பொலிசார், அவர் இறந்து விட்டாரா என்பதை சோதிக்காமலேயே தடயவியல் சோதனையில் இறங்கி விட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Carmenஇன் வலது பக்க நெஞ்சை ஒரு குண்டு உரசிச் சென்றுள்ளதாகவும் இன்னொரு குண்டு அவரது காலில் பாய்ந்துள்ளதாகவும், ஆனால் அவரது நிலைமை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது நிலைமை சற்று முன்னேறியதும் அவரை சுட்டது யார் என்பது குறித்து விசாரிக்க இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்